வழமைக்குத் திரும்பியுள்ள எரிபொருள் விநியோகம்

425 0
கடந்த இரண்டு நாட்களாக எரிபொருள் தொழி;ற்சங்க பணியாளர்கள் முன்னெடுத்த பணிபுறக்கணிப்புக் காரணமாக எரிபொருள் விநியோகம் தடைப்பட்டிருந்தது.
எனினும் தற்காலிகமாக நேற்றைய தினம் இராணுவத்தினர் எரிபொருள விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில்,இன்று காலை 6 மணி தொடக்கம் எரிபொருள் விநியோகம் வழமைப் போல் நடைபெறுவதாகவும்,காலை 6 மணி தொடக்கம் மத்தியானம் 12 மணிவரை கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து 176 எரிபொருள் பவுசர்கள் எரிபொருள்களுடன் வெளியிடங்களுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனங்களில் 830 மெற்றிக்தொன் பெட்ரோல், 1285 மெற்றிக்தொன் டீசல் என்பன நிரப்பப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் களஞ்சியசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் சஞ்சீவ விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் முத்தராஜவல எரிபொருள் களஞ்சியசாலையில் இருந்து 75 எரிபொருள் பௌசர்கள் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment