எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு நன்றி

351 0
பாடசாலை மாணவர்கள்,நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்பில் சிந்திக்காமல் கனியவள தொழிற்சங்க பவணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையில் 10 இலட்சத்துக்கு அதிகமான முச்சக்கரவண்டிகள் காண்படுவதாகவும் இவர்கள் தமது அன்றாட வருமானத்தை முச்சக்கர வண்டி செலுத்துவதன் மூலமே பெறுவதாகவும்,எரிபொருள் பணிபுற்க்கணிப்பினால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் முச்சக்கரவண்டி சாரதிகளே அதிகமாகப் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் அர்ஜுண சுட்டிக்காட்டினார்.
குறித்த தொழிற்சங்கத்தினர் அரசியல் இலாபத்திற்காக இவ்வாறான பணிப்பறக்கணிப்பினை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த இக்கட்டான நிலையிலும் இராணுவத்தினரின் பணிக்காக தமது நன்றியையும் அமைச்சர் அர்ஜுண நாடாளுமன்றில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தான் எந்த சந்தர்ப்பதிலும் கலந்துரையாடல் மூலம்  எந்த முடிவினையும் எடுப்பதற்கு தயாராகவிருப்பதாக தெரிவித்த அமைச்சர் தொழிற்சங்கங்கள் கேட்கும் அனைத்தையும் வழங்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

Leave a comment