மின்சார தடை ஏற்படும் அபாயம்

839 0
நாட்டின் பல இடங்களில் ஏற்பட்டுள்ள வரட்சிக் காரணமாக மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதhக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்படலாம் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் நிலவியுள்ள வரட்சியான காலநிலையின் காரணமாக நாளாந்த மின்சார விநியோகத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று இரவு நாட்டின் பல இடங்களிலும் மின்சார விநியோகத்தடை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஊழியர் பணிப்புறக்கணிப்பினால் எம்மிலிப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் கிடைக்காமையாலும் மின் விநியோகத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை தோன்றியிருப்பதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment