யாழ்-புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கொலை வழக்கு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணைகள் மேற்கொள்ளுமாறு இரகசியப் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் சுவிஸ்குமார் பிரதேசவாசிகளால் கட்டிவைக்கப்பட்ட போது அவரை விடுவித்தது விஜயகலா மகேஸ்வரன் என்பது தொடர்பான காணொளிக் வெளியாகியுள்ளதுடன்,இது தொடர்பில் விஜயகலாவிடம் விசாரணைகள் மேற்கொள்ளுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிபதி மொஹமட் மிஹால் இரகசிய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கொலை வழக்கின் சந்தேகநபர் சுவிஸ்குமார் தப்பிச் செல்ல உதவிப்புரிந்த குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் அனுருத்த ஜயசிங்க நீதிமன்றில் வழங்கிய வாக்குமூலத்தினை கருத்திற்கொண்டே நீதவான் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவை விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

