சூழ்ச்சிகளால் அரசை கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நீண்டகால அரசியல் நோக்கு மற்றும் அனுபவங்களுடன் நாடு முன்னோக்கி செல்லும் பயணத்தை யாராலும் இடைநிறுத்த முடியாது
எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மக்களால் அதிகாரங்கள் பறிக்கப்பட்டவர்கள் வௌவேறு சூழ்ச்சிகளை செய்து மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்பாகமுவ முஸ்லிம் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டப் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

