ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது நிலவும் சில பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

