மொனராகலை பகுதியில் கடுங்காற்று – குடியிருப்புகள் சேதம்

604 0
மொனராகலை – ஒக்கம்பிட்டிய பிரதேசத்தின் ஊடாக ஊடறுத்துச் சென்ற கடுங்காற்று காரணமாக 11 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
நேற்று மாலை குறித்த பகுதியில் இவ்வாறு கடுங்காற்று வீசியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக ஒக்கம்பிட்டிய–கிராமிய மருத்துவமனையின் கட்டடங்கள் பலவற்றிட்கும் மதில் சுவருக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment