கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்க சம்பந்தன் கோரிக்கை!

319 0

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்தில் சாதாரண மக்களுக்கு சொந்தமான சுமார் 180 ஏக்கர் காணி இன்னும் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். 

குறித்த காணிகளை முடிந்தளவு விரைவாக மக்களுக்கு மீள வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாதுகாப்பு பிரிவினரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மீள் குடியேற்ற அமைச்சர் டீ.எம். சுவாமிநாதனின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் காணிகளை இழந்த முல்லைத்தீவு, கேப்பாபிலவு மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது கேப்பாபிலவு பிரதேசத்தில் மக்கள் மீள் குடியேற்ற செய்யப்படும் விதம் குறித்து அமைச்சர் டீ.எம். சுவாமிநாதனால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, காணிகளில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வௌியேறும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பாதுகாப்பு பிரிவின் பிரதாணிகள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், தமது காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேச மக்கள் ஆரம்பித்துள்ள உண்ணவிரதப் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

Leave a comment