அசெல குணரத்னவுக்கு இந்திய தொடர் முழுவதிலும் விளையாட முடியாத நிலை 

407 0

காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வீரர் அசெல குணரத்ன, இந்திய அணிக்கு எதிரான தொடர் முழுவதிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா கிரிக்கட் முகாமையாளர் அசங்க குருசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியுடனான நேற்றைய போட்டியின் போது காயமடைந்த அவருக்கு இன்று கொழும்பில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில் அவருக்கு ஒரு மாத காலம் கட்டாய ஓய்வு தேவை என்று வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

எனவே அவர் எஞ்சியுள்ள இந்திய அணிக்கு எதிரான போட்டிகள் எதிலும் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்று அசங்க குருசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment