பாரம்பரிய வெற்றிலைப் பயன்பாட்டிற்கு பாதிப்பில்லை

219 0

புகையற்ற புகையிலையடங்கிய பொருட்கள் தயாரிப்பு மற்றும் இறக்குமதியை தடை செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் படி பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் வெற்றிலை பாவனைக்கு தடையில்லை என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 

புகையற்ற புகையிலை பொருட்களின் உற்பத்தியை தடை செய்வதற்கு புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றிற்கு தேசிய அதிகாரசபை அண்மையில் தீர்மானித்தது.

புகையற்ற புகையிலை அடங்கிய பொருட்களின் உற்பத்தி அல்லது கலவை அல்லது சிறு இனிப்புச் சுவையுடைய அல்லது நிறமுடைய புகையிலை அடங்கிய சிகரட் அல்லது புகையிலை அடங்கிய இலக்ட்ரிக் சிகரட் பேன்றன தயாரிப்பு, இறக்குமதி, விற்பனை மற்றும் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தல் என்பன தடை செய்யப்படுவதாக, தேசிய புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபை அறிவித்தது.

கடந்த காலங்களில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிகளவில் அடிமையாகியிருந்த மாவு, பாபுல் போன்ற வஸ்துக்கள் அடங்கிய புகையிலை தயாரிப்பை தடை செய்யும் நோக்கில் இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக தேசிய புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபை கூறியுள்ளது.

அவற்றை பயன்படுத்துவதன் ஊடாக சுகாதார ரீதியாக பல நோய்கள் ஏற்படும் என்றும் பிரதானமாக வாய்ப்புற்று நோய், மனநல பாதிப்பு மற்றும் வயிற்றுடன் சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுகாதார அமைச்சரினால் 2016 செப்டம்பர் 01ம் திகதி புகையற்ற புகையிலையடங்கிய பொருட்கள் தயாரிப்பு மற்றும் இறக்குமதியை தடை செய்வதற்கான விதிமுறைகள் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதாக தேசிய புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபையின் தலைவர் பாலித அபேகோன் கூறினார்.

இதனூடாக ஒருபோதும் பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் வெற்றிலை பாவனைக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை என்று அவர் கூறினார்.

Leave a comment