இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.
காலி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடி வருகின்றது
அதன்படி நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கட்டுக்களை இழந்து 399 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகார் தவான் 190 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்
இந்த நிலையில், நேற்றைய ஆட்டநேர முடிவில் சதீஷ்வர் புஜாரா 144 ஓட்டங்களையும், அஜின்கியா ரஹானே 39 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

