இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள – 180க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு

344 0

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக 180க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

குஜராத், அசாம் மற்றும் அருணாச்சல் பிரதேஸ் ஆகிய மாநிலங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நேற்றையதினம் குஜராத்தின் பனாஸ்கந்தா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

இதன்படி குஜராத்தில் வெள்ளத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 110ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் அசாம் பிராந்தியத்தில் 75 பேர் வெள்ளத்தினால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அங்கு மழை பெய்து வருகின்ற நிலையில், வெள்ளப்பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Leave a comment