எரிபொருள் விநியோகம் இன்று காலை முதல் வழமைக்கு

350 0

இலங்கையில் நேற்றைய தினம் கடும் சர்ச்சை நிலமையை ஏற்படுத்தியிருந்த பெற்றோலிய கூட்டுத்தாபன பணியாளர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை தொடக்கம் தமது பணியாளர்கள் எண்ணெய் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.

ஒன்றியத்தின் இணைப்பாளர் டி.ஜே ராஜகருணா இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சு வார்த்தையினை அடுத்து தமது தொழிற்சங்க போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படிஇ தமது கோரிக்கைகளை நிறைவேற்ற எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றியத்தின் அழைப்பாளர் டி.ஜே ராஜகருணா கூறியுள்ளார்.

இதனிடையே கனிய எண்ணெய் தொழிற்சங்க பணியாளர்கள் கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய சாலையில் மேற்கொண்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 16 பேரும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment