இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த ஈழ அகதிகள் தற்போது தாயகம் திரும்புகின்றனர்.
அதன்படி இன்றைய தினமும் 36 இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்பவுள்ளனர்.
தமிழ்நாட்டில் அகதிகளாக வசித்துவந்த நிலையிலேயே இவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர்.
ஏற்கனவே கடந்த செவ்வாய்கிழமை 57 பேர் நாடு திரும்பி இருந்தனர்.
இதன்படி இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 850 பேர் வரையில் நாடுதிரும்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

