விடுதலைப்புலிகள் மீதான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு ஒன்றில் விடுதலைப்புலிகளின் தடையை ஒன்றியம் நீக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
எனினும் இந்த தீர்ப்பு 2011-2015 காலப்பகுதிக்குரிய தீர்ப்பு என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது
இந்த தீர்ப்பு 2015- 2016 காலப்பகுதியில் ஐரோப்பிய சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குறிக்கவில்லை.
எனவே விடுதலைப்புலிகள் மீதான தடை ஐரோப்பிய ஒன்றியத்தி;ல் தொடர்ந்தும் இருக்கும் என்று ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது

