சந்திரனில் மிகப்பெரிய ஏரிகள் உள்ளன: விஞ்ஞானிகள் புதிய தகவல்

247 0

சந்திரனில் பாறைகளுக்கு அடியில் மிகப்பெரிய ஏரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் எதிர்காலத்தில் சந்திரனில் தங்கியிருந்து ஆய்வு நடத்தும் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரனில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அப்பல்லோ விண்கலம் மூலம் அங்கிருந்து சேகரித்து வரப்பட்ட மண் மாதிரிகள், பாறைகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முந்தைய ஆய்வுகளில் சந்திரனில் மிகவும் உள்ளடங்கிய பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கூறப்பட்டது.

2008-ம் ஆண்டு நடந்த ஆய்வில் சந்திரனில் உள்ள எரிமலையில் இருந்து வெளியான கண்ணாடி துகள்களில் தண்ணீர் பிரமங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து தண்ணீர் உள்ளதா? என்பதை முழுமையாக கண்டறிய தொடர்ந்து ஆய்வுகள் நடைப் பெற்றன. அதில் சந்திரனில் பாறைகளுக்கு அடியில் மிகப்பெரிய ஏரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த தண்ணீர் எதிர்காலத்தில் சந்திரனில் தங்கியிருந்து ஆய்வு நடத்தும் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment