விலைக்குறைப்பு தொடர்பில் லங்கா ஐ.ஓ.சி அறிவிப்பு

314 0

ceypetco_ioc-415x260லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தமது பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி எக்ஸ்ட்ரா ப்ரீமியம் யூரோ 3 என்ற பெற்றல் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள அதேநேரம், எக்ஸ்ட்ரா மைல் டீசலின் விலையும் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெற்றலின் புதிய விலை 121 ரூபாவாகவும், டீசலின் புதிய விலை 97 ரூபாவாகவும் நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலைகள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.