இந்தியாவுடனான உடன்படிக்கையே பிரபாகரனை தோற்கடிக்க உதவியது – நவீன் திஸாநாயக்க

228 0

1987ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையே விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தோற்கடிக்க உதவியது என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டபோது தமது தந்தையாரான காமினி திஸாநாயக்க ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தின் அமைச்சராக இருந்தார்
எனினும் இன்று இலங்கை இந்திய உடன்படிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்த்தது.

இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்காதுபோனால் இந்தியா, பிரபாகரனை தோற்கடிக்க உதவியிருக்காது

உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமையால், 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அரசாங்கம், பிரபாகரனை தோற்கடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இந்தியா எதிர்ப்பை வெளியிடவில்லை என்றும் அமைச்சர் ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன் பிரபாகரனை தோற்கடிக்க இந்தியா உதவியிருக்காதுபோனால் பயங்கரவாதம் மிக பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்றும் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

Leave a comment