உண்மையான நல்லிணக்கம் எது – சம்பந்தன் விளக்குகிறார்

270 0

காணாமல்போன ஆட்களின் குடும்பங்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையானதென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

காணாமல்போன ஆட்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

காணாமல்போன ஆட்கள் தொடர்பான பிரச்சினையை தீர்வுகாண வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றதையும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுடைய பெயர்களும், அவ்வாறு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களும் பகிரங்கப்படுத்தப்படும் என அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது.

அத்துடன், இரகசியத் தடுப்பு முகாம்களைப் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.

எனினும், ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறுப்புகள் நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறான நிலையில், காணாமல்போன ஆட்கள் தொடர்பாக  அரசாங்கம் தம்மிடம் உள்ள தகவல்களை வெளியிடுவதற்கான இயலுமையைக் கொண்டிருப்பதனால் அவற்றை வெளியிட வேண்டியது முதற்படியாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment