சம்பந்தன் விக்னேஸ்வரன் சந்திப்பு

345 0

எதிர்கட்சித்தலைவர்  தலைவர் இரா.சம்பந்தனை வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஏனைய விடயங்களுடன் வடமாகாண சபையின் தற்போதைய நிலைமையும் பரிசீலிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

வடமாகாண சபையில் எழுந்துள்ள நிலைமை குறித்து தீர்மானங்கள் எடுக்கும் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் கலந்துறையாட இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அந்த கலந்துரையாடல் வரை வடமாகாணசபையில் முன் மொழியப்பட்ட பிரேரணைகள் உட்பட சபையில் எழும் ஏனைய முரண்பாட்டான நடைவடிக்கைகளும் பிற்போடப்படுவது தேவை எனவும் இதன்போது இணங்கிக்கொள்ளப்பட்டது.

 

Leave a comment