விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் உடன்பாடில்லை –  இல.கணேசன்

15670 203

விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் உடன்பாடில்லை என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கு உடன்படுகிறேன்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு தீர்வு காணவேண்டும்.

அத்துடன், விளைநிலங்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் தனக்கு உடன்பாடில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment