அரசியல்வாதிகளுக்கு எதிராக மதுரையில் கமல் ரசிகர்கள் கண்டன சுவரொட்டிகள்

1279 59

ஊழல் குறித்தும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் நடிகர் கமல்ஹாசன் விமர்சனங்களை முன்வைத்து வருவதையடுத்து கமல் ரசிகர்கள் மதுரையில் அரசியல்வாதிகளுக்கு கண்டன வாசகங்களுடன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாக கமல் கூறியதையடுத்து அமைச்சர்கள் அன்பழகன், ஜெயக்குமார், சண்முகம் மற்றும் சிலரும் கடுமையாக கமலை விமர்சித்துள்ளனர்.

இதனையடுத்து மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கமல் ரசிகர்கள் அரசியல்வாதிகளைக் கண்டித்து கடுமையான வாசகங்களுடன் சுவரொட்டிகளை ஒட்டியது பரபரப்பாகியுள்ளது.

Leave a comment