யாழில் சிறப்பாக இடம்பெறவுள்ள உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மாநாடு

240 0
யாழில் இடம்பெறவுள்ள உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் இரு நாள் மாநாட்டில் ஐரோப்பா மற்றும் கனடா நாட்டிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டோரும் வடக்கு , கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகள் மற்றும் கட்சிப் பிரமுகர்களும் கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஜேர்மனிய கிளைத் தலைவர் இ.இராயசூரியர் தெரிவித்தார்.
இது தொடர்பில் உலகத் தமிழர் இயக்கத்தின் ஜேர்மனிய கிளைத் தலைவர் மேலும் விபரம் தெரிவிக்கையில்,
யாழில் இடம்பெறவுள்ள உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் இரு நாள் மாநாட்டில் ஐரோப்பா மற்றும் கனடா நாட்டிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டோரும் வடக்கு , கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகள் மற்றும் கட்சிப் பிரமுகர்களும் கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மகாநாடே இவ்வாறு இடம்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மாநாடு ஓகஸ்ட் 5ம் , 6ம் திகதிகளில் இடம்பெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதாவது யாழில் இடம்பெறவுள்ள இந்த  உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் இரு நாள் மாநாட்டில் ஐரோப்பா மற்றும் கனடா , இந்தியா , சிங்கப்பூர் உள்ளிட்ட பல  நாட்டிலிருந்தும்  நூற்றுக்கு மேற்பட்டோரும் வடக்கு , கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகள் மற்றும் கட்சிப் பிரமுகர்களும் கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு கிழக்கு மட்டுமன்றி இலங்கையில் உள்ள மூத்த தமிழ் தலைவர்கள் , உணர்வாளர்கள் கலந்து கொள்ள ஏற்பாடாகியுள்ளது. 1974ம் ஆண்டு இடம்பெற்ற தமிழர் ஆராச்சி மாநாட்டிலேயே முதன் முதலாக இந்த தமிழர் பண்பாட்டு இயக்கமும் உருவானது. தமழ் மொழிக்குரிய பண்பாடு , விழுமியங்களைப் பேணிப்பாதுகாப்பதோடு அதனை உலகிற்கும் எடுத்துச் செல்லும் நோக்கோடு உருவாக்கப்பட்டது.
இதுவரை ஜேர்மனி , பிரான்ஸ் , இந்தியா , மலேசியா , சுவிஸ் , ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளில் குறித்த மாநாடு இடம்பெற்றுள்ளது. இறுதியாக இந்தியாவின் தமிழ்நாட்டில் நடாத்தப்பட்டது. இவ்வாறு பல நாடுகளிலும் இடம்பெற்ற உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடே தற்போது யாழில் இடம்பெறவுள்ளது. இவ்வாறு இடம்பெறும் மாநாடுகள் முதன்நாள் 5ம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திலும் இரண்டாம் நாள் 6ம் திகதி ரில்கோ விருந்தினர் விடுதியிலும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலாம் நாள் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் , முதலமைச்சர் உள்ளிட்டோரும் இரண்டாம் நாள் நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைவர்கள் உட்பட பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் கல்விமான்கள் எனப் பலரும் கலந்து கொள்ளும் இந் நிகழ்வின் இறுதியில் உள்ளூர் கலைஞர்கள் பலரும் கௌரவிக்கப்படவுள்ளனர். என்றார்.

Leave a comment