கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலைய நாய் கடித்து முதியவர் பலத்த காயமடைந்துள்ளார்

233 0
கிளிநொச்சி தர்மபுரம் பொலீசில் முறைப்பாடு பதியச் சென்ற முதியவரை பொலிஸ் நிலைய வளாகத்திற்குள் நின்ற நாய்கள் இரண்டு கடித்துக் குதறியதில் முதியவர் படுகாயமடைந்ந நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் தர்மபுரத்தைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை- புண்ணியமூர்த்தி , வயது 81 என்ற முதியவரே படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலீஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதியச் சென்ற முதியவரை பொலிஸ் நிலைய வளாகத்திற்குள் நின்ற நாய்கள் இரண்டு கடித்துக் குதறியதில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன் கிழமை மாலையில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் மோட்டார் சைக்கிளை வெளியில்  நிறுத்திவிட்டு பொலிஸ் நிலையத்திற்குள் சென்று முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார். அவ்வாறு முறைப்பாட்டினை பதிவு செய்த குறித்த முதியவர் வீடு செல்வதற்காக வீதிக்கு செல்ல முற்பட்டுள்ளார்.
குறித்த சமயம் பொலிஸ் நிலைய வளாகத்திற்குள் நின்ற பல நாய்கள் குறித்த முதியவரை விரட்டியுள்ளது. நாய்களிடம் இருந்து தப்புவதற்கு முதியவர் முயன்றுள்ளார் . இருப்பினும் இரு நாய்கள் மூன்று இடங்களில் பலமாக கடித்துள்ளன. இதனால் படுகாயமுற்ற முதியவர் வீதிக்கு வந்தபோதும் மோட்டார் சைக்கிளை செலுத்த முடியவில்லை அருகில் இருந்த வர்த்தக நிலையம்வரையில் உறுட்டிச் சென்று அங்கே நிறுத்தி விட்டு வீடுவரையில் கால் நடையாகச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் இரவு முதியவரின் மகன் அவதானித்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டவேளையில் விடுதியில் அனுமதிக்கப்பட்ட முதியவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முதியவரின் மகன் தந்தை மேற்கொள்ளும் தோட்டத்தில் கால்நடைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான முறைப்பாடு ஒன்றிற்கு சென்ற சமயம் பொலிஸ் நிலையத்திலேயே கட்டாக்காலி கால் நடைகளின் கொடுமையால் கடியுறும் நிலமை காணப்பட்டால் பொதுமக்கள் கூடும் இடமாகவும் அன்றாட பணிக்காக மக்கள் செல்லும் இடத்தில் பொலிசாரே அசட்டையாகச் செயல்பட்டால் இவர்களால் எவ்வாறு மக்களை கட்டுப்படுத்தி சட்டம் , ஒழுங்கைப் பேணமுடியும் என்ற கேள்வி எழுகின்றது. என்றார்.

Leave a comment