ஹம்பாந்தோட்டையில் கைக்குண்டு தாக்குதல் – 17 பேர் காயம்

240 0

ஹம்பாந்தோட்டை அங்குனுகொல பெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை – அங்குனுகொல பெலஸ்ஸ – வெட்டிய பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் காயமடைந்த 17 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவேண இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment