திருகோணமலை சேருநுவர காட்டினுள் உருக்குலைந்த சடலம் மீட்பு.!

866 4

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியமான்கேணி காட்டுப் பகுதியில் , பிறந்து சில நாட்களேயான ஆண் சிசுவொன்றின் சடலமொன்று, உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என,

சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

அரியமான்கேணி காட்டுப்பகுதியில் நேற்று (19) மாலை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நபரொருவர், சிசுவின் சடலமொன்று இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிசுவின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment