வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவைக்குள் பயிற்சி அடிப்படையில் உள்ளீர்ப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வரவேற்றுள்ளனர்.
அத்துடன், குறித்த தீர்மானத்தை விரைவில் நடைமுறைப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் 150வது நாளாகவும் இன்று மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்று வருகின்றது.