ஹம்பாந்தோட்டை அரசாங்க மருத்துவமனைகள் பணிப்புறக்கணிப்பு

223 0

மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தோட்டை அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் சேவை புரியும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தற்போது பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

சுகாதார சேவை பணிப்பாளர் தன்னிச்சையாக மருத்துவர்களை இடமாற்றம் செய்வதாக அந்த சங்கத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்ட கிளையின் செயலாளர் அநுர ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இது தொடர்பில் எமது செய்தி சேவை, ஹம்பாந்தோட்டை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர், மருத்துவர் சமல் சஞ்சிவவிடம் வினவிய போது, நீண்ட காலமாக மருத்துவமனைகளில் சேவை புரிந்த மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட மருத்துவர்களையே வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment