தங்க பிஸ்கட்களை கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பிரஜைகள் இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் UL139 என்ற விமானத்தில் இவற்றை கடத்திச் செல்ல முற்பட்ட போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவை 199.6 கிராம் மற்றும் 295.95 கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்கள் என்று சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார். இவற்றின் பெறுமதி 1,099,780 ரூபா மற்றும் 1,627,725 ரூபா ஆகும் என்று அவர் மேலும் கூறினார். 39 வயது மற்றும் 46 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் 50,000 ரூபா மற்றும் 30,000 ரூபா தண்டம் அறவிட்ட பின்னர் சந்தேகநபர்களை விடுவிப்பதற்கு பிரதி சுங்கப் பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

