அரசியல் கைதிகள் குறித்து நாளை பேச்சுவார்த்தை

468 0

welikada_prison_jan23_2010_3-720x480சட்ட அதிபர் திணைக்களத்தில் தேங்கியுள்ள வழக்குகளை விரைவுப் படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு நாளையதினம் மீண்டும் சந்திக்கவுள்ளது.

இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தாம் எடுத்துரைக்கவிருப்பதாக, மீள்குடியேற்றத்துறை மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் எ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் தங்களின் விடுதலையை வலியுறுத்தி இன்றையதினம் அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தபட்டுள்ளது.
அதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, சிவில் சமுக அமைப்புகள் மற்றும் சமுக செயற்பாட்டு குழுக்களால் வெலிக்கடை சிறைக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
ஐக்கிய சமத்துவ கட்சி, புதிய சமசமாஜ கட்சி, சமத்துவ கட்சி, புதிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளும், ஆசிரியர் சங்கம், புதிய தலைமுறை உள்ளிட்ட சமுக அமைப்புகளும் இதில் பங்கேற்றிருந்தன.