யுத்தத்தில் உயிரிளந்தவர்களுடைய விபரங்கள் திரட்டப்பட வேண்டும் நல்லிணக்க செயலணி முன் சாவகச்சேரி மக்கள்

396 0

SriLanka-6இயுதி யுத்தத்தின் போது எத்தனை அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்ற உத்தியோக பூர்வமான கணக்கெடுப்பு ஒன்றினை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான செயலணி முன்பாக தென்மராட்சி மக்கள் கோரியுள்ளனர்.
நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான செயலணியில் கலந்து கொண்ட தென்மராட்சி பிரதேச மக்களினாலேயே மேற்படிக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இக் கோரிக்கை தொர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:- இறுதி யுத்தத்தின் போது பொது மக்கள் செறிந்திருந்த இடங்களில் மூர்க்கத்தனமாக செல்லதாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இத் தாக்குதல்களில் ஏராளமான பொது மக்கள் ஊடல் சிதறி உயிரிளந்திருந்தார்கள்.
இருப்பினும் யுத்தத்தின் போது எத்தனை பொது மக்கள் உயிரிளந்தார்கள் என்ற உத்தியோக பூர்வமான புள்ளிவிபரங்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இவ்வாறான தகவல்களை திரட்ட வேண்டிய அரசாங்கம் வெறுமனே 10 ஆயிரம் பொது மக்களே அச் சந்தர்ப்பங்களில் உயிரிளந்தார்கள் என்று கூறுகின்றது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் போது ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்திற்குள் சுமார் 25 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் வரையான சடலங்களை கடந்து கடந்துதான் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றோம்.
இறுதி யுத்தத்தில் உயிரிளந்த பொது மக்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் பெய்யானவை.
இவ்வாறு உயிரிளந்தவர்களுடைய உத்தியோக பூர்வமான புள்ளிவிபரங்களை திரட்டுவது என்பது அரசாங்கத்தினால் முடியாத காரியம் இல்லை. ஆனால் ஏன் அரசாங்கம் அதனைச் செய்யாமல் இருக்கின்றது.
இனியாவது இறுதி யுத்தத்தின் போது உயிரிளந்தவர்கள் எத்தனை போர் என்பது தொடர்பான உத்தியோக பூர்வுமான புள்ளிவிபரங்களை அரசாங்கம் சேகரித்து மக்கள் மத்தியில் வெளிப்படுத்த வேண்டும் என்றனர்.