கவணரை பிடித்து வைத்திருந்த சிங்கள இராணுவம் அவரை விடுவிக்க என்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியது

806 0

9d6e19ff-f189-4e3c-95b7-6f04b053272dகதவினை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த இராணுவம் எனது கணவரை இழுத்துச் சென்றது. கணவரை விடுவிக்குமாறு வரணியில் உள்ள படைமுகாமிற்கு சென்று கேட்ட போது அங்கிருந்த சிங்கள இராணுவத்தினர் என்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியிருந்தனர்.
இவ்வாறு சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் செயலணி முன்பாக குடும்பப் பெண் ஒருவர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- எனது கணவர் இராணுவத்தினால் பிடித்துச் செல்லப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது.
அன்று இரவு 3 மணியளவில் எமது வீட்டின் வேலிகளை பிடிங்கி எறிந்து கொண்டு ஏராளமான இராணுவத்தினர் வந்து வீட்டினை முற்றுகையிட்டிருந்தனர். இவ்வாறு முற்றுகையிட்ட இராணுவத்தினர் வீட்டின் கதவினை உடைத்துக் கொண்டு உள்ளேயும் நுழைந்திருந்தனர்.
முகங்களை மறைத்து கறுத்த துணிகளை கட்டிக் கொண்டும், கைகளின் ஆயுதங்களை தாங்கியவாறும் தனியே சிங்கள மொழியில் உரக்க பேசிக் கொண்டு உள்நுழைந்த இராணுவத்தினர் வீடு முழுவதும் தேடுதல் நடத்தியிருந்தவர்.
எமது வீட்டில் சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து அயல் வீட்டில் உள்ளவர்கள் அங்கு வந்திருந்த வேளை, அவர்களை துப்பாக்கியை காட்சி அச்சுறுத்திய இராணுவத்தினர் அங்கு நின்றால் சுட்டுக் கொல்லுவோம் என்று அச்சுறுத்தியிருந்தனர். இதனால் அங்கு வந்த அயல் வீட்டாரும் திரும்பிச் சென்றுவிட்னர்.
இதன் பின்னர் வீட்டிற்குள் எங்களுடன் இருந்த எனது கணவரை இராணுவத்தினர் இழுத்துச் சென்றனர். நாளை காலை விடுதலை செய்துவிடுவோம் என்று கூறி நானும் எனது பிள்ளைகளும் தடுக்க தடுக்க இராணுவத்தினர் கணவரை இழுத்துச் சென்றிருந்தார்கள்.
இருப்பினும் மறுநாள் எனது கணவர் விடுவிக்கப்படவில்லை. வரணியில் உள்ள படைமுகாமிற்குச் சென்று கேட்டோம். விசாரணையின் பின் விடுவிப்பதாக கூறினார்கள். மேலும் அவர் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி என்பதை ஒப்புக் கொண்டால் அவரை விடுதலை செய்வோம் என்றும் என்னிடம் இராணுவம் கூறியிருந்தனது.
எனது வீட்டிற்கு வந்த இராணுவத்தினரும் அவரை விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி என்பதை ஒப்புக் கொண்டால் விடுதலை செய்வோம் என்றனர்.
இதன் பின்னர் வரணியில் உள்ள குறித்த படைமுகாமிற்குச் சென்று எனது கணவரை விடுதலை செய்யுமாறு கோரும் போது, அங்கிருந்த ஒரு இராணுவ அதிகாரி ஒருவர் என்னை தனியாக இராணுவ முகாமிற்கு வருமாறும். அவ்வாறு தனியான இராணுவ முகாமிற்கு வந்தால் கணவரை காண்பிப்பதாகவும் கூறியிருந்தார்.
இவ்வாறு இராணுவத்தினர் கேவலமான செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் எங்களைவர் புறுத்தினார்கள். இதனால் அந்த படைமுகாமிற்கு நான் செல்வதையே நிறுத்திவிட்டேன். இப்போதுவரைக்கும் இராணுவத்தினால் இழுத்துச் செல்லப்பட்ட எனது கணவர் எங்கே என்று தெரியாது என்று அந்த குடும்பப் பெண் செயலணி முன்பாக தெரிவித்திருந்தார்.