இலங்கைக்கு புதிய யாப்பு ஒன்று அவசியம்

268 0

ஜனநாயகத்தை மீள ஸ்தாபிக்கவும்இ நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கவும்இ தற்போது இருக்கின்ற அரசியல்யாப்புக்கு பதிலாக புதிய யாப்பு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் யாப்பு தொடர்பான பொது கருத்தறிதல் குழுவின் தலைவர் லால் விஜயநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள அரசியல் யாப்பானது பல்வேறு திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுஇ குழப்பங்களைக் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றப்பிரேரணைக் கொண்டுவரப்பட்டு அவரை பதவி நீக்கியமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.

தற்போதுள்ள அரசியல் யாப்பினால் நாட்டின் சட்ட ஒழுங்குகள் சீர்கெட்டுள்ளன.

இந்த நிலையில் நாட்டை ஜனநாயகப்படுத்தவும்இ மறுசீரமைப்பு இலக்குகளை அடைந்துக் கொள்ளவும் புதிய அரசியல் யாப்பு ஒன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று லால் விஜயநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment