ரத்மலானையில் 218 கிலோ கொக்கேய்ன் மீட்பு – 3 பேர் கைது 

272 0

ரத்மலானையில் 218 கிலோ கொக்கேய்ன் மீட்பு – 3 பேர் கைது
சதொச நிறுவனதிற்கு தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து 218 கிலோ எடைகொண்ட கொக்கெய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் வைத்து நேற்று மாலை திறக்கப்பட்ட அந்த கொள்கலனில் இந்த கொக்கையின் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து குறித்த கொள்கலன் பிரேசிலில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கிடையில்இ கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படிஇ ரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்திற்கு சீனி இறக்குமதிக்கான கேள்வி அறிவித்தலில் தகுதி பெற்ற தனியார் நிறுவனம் ஒன்Nறு இந்த கொள்கலனை இறக்குமதி செய்துள்ளது.
அந்த நிறுவனத்தினால் பிரேசிலில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்ட கொள்கலன் ரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் அமைந்துள்ள சதோச களஞ்சிய சாலைக்கு நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காவல்துறையின் போதை பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படிடையில் குறித்த கொள்கலன் திறக்கப்பட்ட நிலையில்இ அதிலிருந்து 10 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளைஇ குறித்த கொள்கலனை இறக்குமதி செய்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளரிடம் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரும் பல தடவைகள் சீனிக் கொள்கலனில் இருந்து பாரிய அளவான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஊடiஉம hநசந வழ சுநிடல ழச குழசறயசன

Leave a comment