உயர்தர மாணவர்களுக்கு கருத்தரங்கு நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

1525 52

எதிர்வரும் ஆகஸ்;ட் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை கல்விப்பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கு கருத்தரங்கு நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியினுள் முன்னோடி பரீட்சை வினாத்தாள் வழங்குதல், மேலதிக வகுப்புக்கள் நடத்தல் போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகின்றன.

Leave a comment