வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட 5 மில்லியன் ரூபாவில், மிருசுவில் வடக்கில் வீதி புனரமைக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ கேசவன் சயந்தன் அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட குறித்த வீதியானது 850 மீற்றர் வரை 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.