கேப்பாபுலவில் இன்று விடுவிக்கப்படுவதாக உறுதியளித்த காணிகள் இன்று விடுவிக்கப்படவில்லை –அரசாங்க அதிபர்

272 0

கேப்பாபுலவில் இன்று விடுவிக்கப்படுவதாக உறுதியளித்த காணிகள் இன்று விடுவிக்கப்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் இராணுவமுகாம் அமைந்திருந்த 179  ஏக்கர் காணி இன்று  விடுவிக்கபடுவதாக இருந்தது. இந்நிகழ்விற்காக  மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதன் வருகைதந்திருந்தார்.  இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் காணிகள் இதற்குள் அடங்கவில்லை என மக்கள்  தெரிவித்த காரணத்தினால் இந்நிகழ்வை அவர்கள் புறக்கணிப்பதான  செயற்ப்பாடுகளில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் இப்பிரச்சனை தொடர்பில் மக்கள் அமைச்சரோடு  கலந்துரையாடியதன் காரணத்தால் எங்களால் இந்த காணிகளை பெறமுடியாமல் போனது. ஆனால் காணிகள் கையளிப்பதற்கு ஏற்ற வகையில் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது எனவே அவற்றை பெற்று உரியவர்களிடம் கையளிக்க முடியும்.  அனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவருடைய காணியும் அதனுள் அடங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயம் என அவர் மேலும்  தெரிவித்தார்.

Leave a comment