அவுஸ்திரேலிய வெளிவிகார அமைச்சர் இலங்கை விஜயம்

229 0
அவுஸ்திரேலிய வெளிவிகார அமைச்சர் ஜுலி பிஷப் அடுத்தவாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவினை வலுப்படுத்தல் மற்றும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக அவர் இலங்கை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
அத்துடன் இலங்கையில் டெங்கு ஒழிப்பு தொடர்பான அவுஸ்திரேலியாவின் உதவி வழங்கல் திட்டம் குறித்து இதன்போது அமைச்சர் ஜுலி பிஷப் அறிவிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment