தூக்கிட்ட நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு

762 0

காத்தான்குடி – ஆரயம்பதி பிரதேசத்தில் உள்ள வீட்டின் அருகாமையில் இருந்து, தூக்கிட்ட நிலையில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட ஆரயம்பதி பிரதேசத்தினை சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு 5 வயது மகன் உள்ளதாக காவல்துறை உத்தியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு இன்று அதிகாலை கிடைத்த முறைப்பாடுக்கு அமைய, குறித்த சடலம் மீட்கப்பட்டடுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி காவல்துறை உத்தியோகஸ்தர்கள் முன்னெடுத்து வருகின்றனர்

Leave a comment