வறிய குடும்பத்தை சேர்ந்த மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு

439 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட மிகவும் பின்தங்கிய அடிப்படை வசதிகளற்ற தென்னியங்குளம் கிராம மக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது

இச் சந்திப்பில் புலம்பெயர் உறவு ஒருவர்  அக்கிராம பிள்ளைகளின் நலன்கருதி ஓர் தனியார் கல்வி நிலையத்தை நடத்துவதற்கு மாதாந்தம் ரூபா 15,௦௦௦ நிதியுதவி செய்து வருகிறார்  இந்நிலையத்தில் 39 பிள்ளைகளுக்கு ஆங்கிலம், கணிதம் ஆகிய இரு பாடங்கள் போதிக்கப்படுகின்றன விஞ்ஞானம், தமிழ் ஆகிய இரு பாடங்களையும் கற்பிப்பதற்கு நிதியுதவி தேவை என்ற கோரிக்கை விடப்பட்டதோடு

யுத்தத்தின்போழுது தந்தையை தொலைத்த ஓர் பெண்பிள்ளை இக்கல்வி நிலையத்திற்கு 6KM தூரம் நடந்து வந்து கல்வி கற்பதாகவும் ஒரு துவிச்சக்கரவண்டி வழங்குமாறும் பெற்றோரால் கோரிக்கை விடப்பட்டது.

,அதேநேரம் அயல்கிராமமான கோட்டைகட்டியகுளம் என்னும் கிராமத்தில் இருந்து தந்தையை இழந்த ஓர் பெண்பிள்ளை கால்நடையாக கல்வி நிலையத்திற்கு வருகின்றார் என்று முறைப்பாடு செய்யப்பட்டது

இதற்கமைய (11) நேற்று முன்தினம் குறித்த பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கனடா வாழ் புலம்பெயர் உறவுவான  திரு.சசி குணரத்தினம் ஆகியோரும் மக்களோடு கலந்துரையாடியுள்ளதோடு

ஒரு மாணவிக்கான துவிச்சக்கரவண்டியினை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா தனது சொந்த நிதியிலும் மற்றைய பிள்ளைக்கான  துவிச்சக்கரவண்டியை கனடா வாழ் உறவு திரு.சசி குணரத்தினம் அவர்களும்  வழங்கிவைத்தார்,

அத்துடன் இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் தனியார் கல்வி நிலையத்தை பார்வையிட்டுக்கொண்ட கனடா வாழ் உறவு திரு.சசி குணரத்தினம் அங்கு பிள்ளைகளின் இருக்கைகள் வசதியற்றதாக இருப்பதை அவதானித்து அவற்றை திருத்துவதற்குரிய செலவினை தருவதாக  தெரிவித்தார். இக்கிராமத்தில் குடிநீர் வசதிகள் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் இங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a comment