யாழ் மாவட்ட திண்ம கழிவுகளை கீரிமலை பகுதியில் கொட்டுவதற்கு நடவடிக்கை

447 0

யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகளில் சேகரிக்கப்படும் திண்மகழிவுகளை வலிவடக்கில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலை இயங்கிய வேளையில் சுன்னக்கல் அகழ்வதற்கு தோண்டப்பட்ட குழிகளில் போட்டு அதனை நிரவுவதற்கான செயற்பாட்டிற்கு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கையெழுத்திட்டார்.
கீரிமலையில் உள்ள குழிகளை நிரவுவதற்கான திட்டமாக, திண்ம கழிவுகளை கொட்டும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் சுற்றாடல் அதிகார சபை ,உள்ளூராட்சி உதவி ஆணையாளர்.மற்றும் வலிவடக்கு பிரதேச சபை செயலர் ஆகியோர் இந்த ஒப்பந்த்த்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.கொறிய நாட்டு நிறுவனம் ஒன்றுடன் இந்த ஒப்பந்தம் 27 வருடங்களுக்கு செய்யப்பட்டுள்ளது.இரண்டு வருடத்தில் இதற்கான ஆரம்பவேலைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் வடக்கு முதல்வர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Leave a comment