ஹெரோய்ன் வைத்திருந்த 4 பேர் வெவ்வேறு பிரதேசங்களில் கைது

345 0

ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களிலிரந்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

கல்கிஸ்ஸ, கல்தமுல்ல பிரதேசத்தில் 64 கிராமும் 850 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்ன் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் றத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை 20 கிராமும் 240 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்னுடன் 24 வயதுடைய யுவதி ஒருவர் மோதரை, தொட்டலங்க விகாரை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தவிர மாளிகாவத்தை பிரதேசத்தில் வைத்து அதே பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் 15 கிராமும் 150 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் மாளிகாவத்தை பிரதேசத்தில் வைத்து 02 கிராமும் 190 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருளுடன் 33 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment