முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் திருத்தத்தை மேற்கொள்ள அனுமதிக்குமாறு, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரியுள்ளது.
அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, குறித்த ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

