இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் 07 பேர்கள் நேற்று இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை இன்றைய தினம் யாழ் மாவட்ட நீரியல் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்கள் இரண்டு விசைப்படகுகளின் மூலமாக பயணம் செய்யப்பட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .அத்துடன் அவர்களின் 2 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் ஜகதாப்பட்டினம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை இன்றையதினம் யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நீரியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஐ.சுதாகர் தெரித்தார்.

