நீதித்துறையின் சுயாதீனத்திற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு

262 0

சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தை நிலைநாட்டுவதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டுவதாக சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் அம்ஜத் ஹூசைன் தெரிவித்துள்ளார். 

நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளதாக நீதியமைச்சு கூறியுள்ளது.

நீதியமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிராந்திய ரீதியாக இலங்கையின் நீதித் துறையை அபிவிருத்தி செய்வது சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாட்டின் நீதிக் கட்டமைப்பை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக மிகுந்த சந்தோசப்பட முடிந்துள்ளதாக சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் அம்ஜத் ஹூசைன் தெரிவித்துள்ளார். நாட்டினுள் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்காக இலங்கை எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டுக்குறியது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a comment