நல்லாட்சி அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து முன்னிற்கும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரவித்துள்ளார்.
யாழ் நீர்வேலியில் அமைந்துள்ள காமாட்சி அம்பாள் கூட்டுறவு கைத்தொழில் சங்கத்தின் விற்பனை நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் வாழும் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏனைய கைத்தொழில்களில் ஈடுபடுவோரின் வாழ்கை தரத்தினை முன்னேற்றுவதற்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். எமது அமைச்சின் மூலம் நீர்வேலி காமாட்சி அம்பாள் இலகு பொறியியல் துறைக்கு 6.9 மில்லியன் ரூபா பணம் ஒத்துக்கீடு செய்யப்படுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.
இந்த நல்லாட்சி அரசாங்கம் வடக்கு, கிழக்கு விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற முன்னிற்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் தொடர்சியாக அரசுக்கு வழங்கிய ஒத்துழைப்பின் மூலம் போதியளவு சேவைகளை எமக்கு ஆற்றமுடியும் என தெரவித்தார்.

