இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டு இந்திய மீனவர்களின் 42 படகுகள் எதிர்வரும் ஓரிரு தினங்களில் விடுவிக்கப்படவுள்ளதாக, கடற்றொழிற்துறை அமைச்சு தெரிவித்து;ளது.
இந்திய – இலங்கை மீனவர்கள் விடயம் தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டின் அடிப்படையில் இவை விடுவிக்கப்படவுள்ளன.
அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்காக வெளிநாட்டு இழுவைப் படகுகளைத் தடுப்பதற்கான சட்ட மூலம் ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் கடற்றொழில்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

