பொலிஸார் சட்டத்தை கையில் எடுத்து அநீதி இழைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை

493 0

பொலிஸார் சட்டத்தை கையில் எடுத்து அநீதி இழைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ் – மணல்காடு பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, கருத்து வௌியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தவே பொலிஸாருக்கு உரிமையுள்ளதாகவும், அதனை மீற அனுமதியில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, யாழில் இடம்பெறும் சட்டவிரோத மண் வர்தகத்துடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்து சட்டத்தை அமுல்டுத்த பொலிஸாருக்கு முடியும் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸார் செய்ய வேண்டியது சட்டத்தின் ஊடாக குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதே தவிர, அவர்களைக் கொலை செய்வதல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

மணல்காடு சம்பவத்தில் பொலிஸார் சட்டத்தை மீறி செயற்பட்டுள்ளதாகவும் எனவே அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment