பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விரைவில் ஊடகவியலாளர்களை சந்திப்பார். இருவாரங்களில் அவர் ஊடக சந்திப்புகளில் வெளிப்படுவார் என அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலாந்த விதானகே தெரிவித்தார்.
ராஜகிரிய சத்தர்மாராஜித விஹாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்னும் இரு வாரங்களில் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுவார். தற்காலத்தில் நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் பேசுவார்.
அவருக்கு பெளத்த மதம் சார்ந்த கடமைகள் பல உள்ளன. எனவே அவர் ஊடக சந்திப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் உள்ளது. இருப்பினும் விரைவில் ஊடகங்களுக்கு வருவார்.
எவ்வாறாயினும் இன்று ஞானசார தேரரின் நிலைப்பாட்டினை உணர்ந்து கொண்டு மாநாயக்க தேரர்கள் நாட்டின் தலைவர்களை அழைத்து பேசும் நிலைமை தோன்றியுள்ளதை பெளத்த மக்கள் அறிந்துள்ளனர் என்பது சிறப்பானதாகும் என்றார்.

