கடந்த காலத்தில் இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு தீர்வைப் பெற்றுத் தருமாறு புலிகள் ஆதரவு அமைப்பினால் விசேட மகஜர் ஒன்று ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரி.ஜீ.ரி.ஈ. எனும் அமைப்பினால் இந்த மகஜர் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சர்வதேச விசேட நிபுணர்கள் தலையிட்டு விசாரணைகளை நடாத்துமாறும் இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

